நிலப்பரப்புக்குள் ஊடுருவிய வெள்ளம் – பிரதான வீதியின் போக்குவரத்து தடை
இன்று மாலை வேளையில் கடல் அலைகள் நிலப்பகுதியை நோக்கி கரை புரண்டமையால் காலி சமுத்ர மாவத்தையிலுள்ள பொலிஸ் நிலையம், சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடல் அலை நிலப்பரப்புக்குள் ஊடுருவி வெள்ளம் மற்றும் மணல் நிரம்பிய காரணத்தால், காலி – மாத்தறை பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
அம்பலாங்கொடை – மாதம்பே உஸ்முதலாவ சந்தியில் இருந்து தெல்வத்தை வரை காலி வீதி மூடப்பட்டுள்ளது.
மேலும், கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல மீன்பிடிப் படகுகளும் அலைகள் காரணமாக கரை ஒதுங்கியுள்ளதுடன், சமுத்திர மாவத்தையின் கரையும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.