இன்று நள்ளிரவு முதல் உணவு வகைகளின் விலை குறைப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 4 வகையான உணவு வகைகளின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ரோல்ஸ், பரோட்டா, முட்டை ரொட்டி, மரக்கறி ரொட்டி ஆகியவற்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு தேநீர் 30 ரூபாவிற்கும், ஒரு பால் தேநீர் 100 ரூபாவிற்கும் விற்பனை செய்ய எதிர்பார்க்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.