இலங்கையில் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தில்
இலங்கையில் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 200 சிறிய மற்றும் நடுத்தர ஆடைத் தொழிற்சாலைகள் இவ்வாறு மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்சாரத் தடை காரணமாக இவ்வாறு ஆடைக் கைத்தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
பெரிய ஆடைத் தொழிற்சாலைகள் ஐ.ஓ.சீ நிறுவனத்திடமிருந்து எரிபொருள் பெற்றுக் கொண்ட போதிலும், சிறிய மற்றும் நடுத்தர ஆடைத் தொழிற்சாலைகள் எரிபொருள் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கூறப்படுகின்றது.
அத்துடன், ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர் போக்குவரத்து பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.