எரிபொருள் வரிசையில் அடிதடி – நால்வர் வைத்தியசாலையில்

கற்பிட்டி – எத்தல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் வரிசையில் அடிதடி; நால்வருக்கு நேர்ந்த கதி!
கற்பிட்டி எத்தல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்தபோது வரிசையில் நின்றவர்களுக்கு இடையில் இவ்வாறு மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது தலையில் பலத்த காயங்களுக்குள்ளான இருவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் இருவர் கற்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எரிபொருள் வரிசையில் அடிதடி; நால்வருக்கு நேர்ந்த கதி!
மேலும் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related Post

ஜனாதிபதி பதவி விலகினால் பதவியை ஏற்க தயார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் புதிய அரசாங்கத்தில் பிரதமர் பதவியை ஏற்க [...]

ஊரடங்கு தொடர்பில் வெளியான தகவல்
நாடு தழுவிய ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் [...]

உணவக உரிமையாளர் துப்பாக்கிச் சூட்டில் பலி
ஹங்வெல்ல, குறுக்கு வீதியிலுள்ள உணவகமொன்றின் உரிமையாளர், இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு [...]