பாரிய நிலநடுக்கம் – 250 பேருக்கு மேல் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் பக்திகா மாகாணத்தில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தில் குறைந்தது 250 பேர் உயிரிழந்துள்ளதாக பிபிசி நெய்திச் சேவை தெரிவித்துள்ளது.
பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் ஓர் உள்ளூர் அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
அத்துடன் சம்பவத்தில் சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தூரத்தில் இந்த நிலநடுக்கம் நடந்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைகளுக்குள் சுமார் 500 தூரத்துக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என ஐரோப்பிய மத்தியத்தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் கூறியதாக ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அதை நேரில் உணர்ந்தவர்களை மேற்கோள் காட்டி அந்த மையம் கூறியுள்ளது.
Related Post

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை
கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் [...]

நேபாளம் விமான விபத்து – இதுவரை 21 உடல்கள் மீட்பு
நேபாளத்தில் உள்ள ஒரு தனியார் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் தாரா ஏர் விமானம் [...]

யாழில் எரிபொருள் வரிசையில் திடீரென சரிந்து வீழ்ந்து ஒருவர் மரணம்
மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் நிரப்புவதற்காக வரிசையில் சென்றவர் திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். [...]