ஊரடங்கு தொடர்பில் வெளியான தகவல்
நாடு தழுவிய ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹிந்த ஆதரவாளர்களால் ஏற்பட்ட கலவரத்தால் கடந்த திங்கட்கிழமை முதல் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் அதனை நீடிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.