உணவக உரிமையாளர் துப்பாக்கிச் சூட்டில் பலி
ஹங்வெல்ல, குறுக்கு வீதியிலுள்ள உணவகமொன்றின் உரிமையாளர், இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் இன்று (19) வந்த இனந்தெரியாத இருவரே உரிமையாளர் (வயது 46) மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
உணவகத்துக்குள் வைத்தே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடும் காயமடைந்த உரிமையாளர்கள் பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
கைத்துப்பாக்கி மூலமாகவே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்த ஹங்வெல்ல பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்