யாழில் 20 வயது யுவதி மது போதையில் வைத்தியசாலையில் அனுமதி


யாழில் காதலனுடன் தீவுப் பகுதிக்கு பயணித்த தெல்லிப்பளை யுவதி ஒருவர் , போதையான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள்ளதாக கூறப்படுகின்றது.

தெல்லிப்பளை சேர்ந்த குறித்த 20 வயது யுவதி, மண்டைதீவிற்கு இடம் பார்ப்பதாக தெரிவித்து வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

இதையடுத்து, நேற்று மீண்டும் திரும்பிய யுவதி வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் நிலத்தில் வீழ்ந்துள்ளார்.

இந்நிலையில் பதறியடித்த தாயார் மயக்கமுற்று வீழ்ந்த மகளை முச்சக்கர வண்டியில் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி மயக்கமுற்று விழவில்லை எனவும், அவர் மது போதையில் வீழ்ந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று போதை தெளிந்த யுவதியிடம் மருத்துவர்கள் பொலிசார் விபரம் கோரிய போது, காதலுடன் பயணித்து எனது சுய விருப்பின் பெயரிலேயே மது அருந்தியதாக யுவதி கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *