பொலிஸ் பொறுப்பதிகாரியின் வீட்டில் திருட்டு சம்பவம்
மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் ஏந்திய கும்பல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவரின் வீட்டில் கொள்ளையடித்துள்ளனர்.
வெலிபன்ன, பொந்துபிட்டிய குருந்த வீதியில் அமைந்துள்ள களுத்துறை வடக்கு, பல்வேறு முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷான் குமார வசிக்கும் வீட்டிலேயே கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள்களில் இன்று பகல் (03) வந்த ஆயுதம் தாங்கிய கும்பல் வீட்டில் இருந்த 2 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் பரிசோதகர் வீட்டில் இல்லாத தருணத்தில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், வீட்டில் இருந்த பொலிஸ் பரிசோதகரின் மனைவி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் T56 துப்பாக்கியை கொண்டு வந்துள்ளனர்.
களுத்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில், வெலிப்பன்ன நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆனந்த சில்வா உட்பட பல பொலிஸ் குழுக்கள் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.