அவுஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் மரணம்
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சைமண்ட்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் டவுன்ஸ்வில்லுக்கு வெளியே இந்த வீதி விபத்து இடம்பெற்றதாக குயின்ஸ்லாந்து காவல்துறையினர் தெரிவித்தனர்.
சைமண்ட்ஸ் அவர்கள் ஹெர்வி ரேஞ்சு சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது அவரது கார் சாலையை விட்டு விலகி தடம் புரண்டு பாரிய விபத்துக்கு உள்ளாகி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் வார்ன் மற்றும் ராட் மார்ஷ் உள்ளிட்ட அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்களின் இழப்பை தொடர்ந்து மூன்றாவதாக அவுஸ்திரேலியா ஜாம்பவான் சைமண்ட்ஸ் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.