கொழும்பில் அமைதியின்மை – குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

கொழும்பு – கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் நிலையத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஹிருணிக்கா உள்ளிட்ட குழுவினருக்கும், பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கொழும்பில் பொலிஸாரை போன்று உடையணிந்து வீதிநாடகம் மேற்கொண்ட இருவரை கறுவாத்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஹிணிக்கா உள்ளிட்ட குறித்த பெண்கள் குழுவினர் அனைவரும் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தம்மையும் கைது செய்யுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்காரணமாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வீதிநாடகத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யுமாறு வலியுறுத்தி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமர்ந்து அதில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரும் அமைதி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
Related Post

2023 வரவு செலவு திட்டம் – தனியார் துறைக்கு ஆதரவு
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக மானியங்களை இலக்குவைப்பதாகவும் தனியார் துறை [...]

அலரிமாளிகைக்கு முன் திடீரென ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டகாரர்கள்
கொழும்பு கொள்ளுப்பிட்டி பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையின் முன்றலில் நேற்று மாலை [...]

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் குருக்கள் விபத்தில் உயிரிழப்பு
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பிரதம குருக்கள் சிவஸ்ரீ மணி சிவானந்த குருக்கள் [...]