இலங்கையில் இளம் வைத்தியர் பரிதாபகரமாக உயிரிழப்பு
பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் இளம் வைத்தியர் ஒருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த தீபால் அமரசூரிய என்ற 30 வயதுடைய வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனையில் அவர் நிமோனியாவால் ஏற்பட்ட பக்டீரியா தொற்று காரணமாக அதிர்ச்சியில் இறந்தது தெரியவந்தது.
இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் இன்று (14) காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் மேலதிக மரண விசாரணை அதிகாரி சந்திரசேன லொகுகேவினால் மேற்கொள்ளப்பட்டது.
பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் இளம் வைத்தியர் ஒருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த மருத்துவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார். பிரேதப் பரிசோதனையின் போது, அவர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வந்ததும், சில வாரங்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
பல நாட்களாக பெற்றோல் வரிசையில் காத்திருந்த வைத்தியர் தனது காரில் இருந்து மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோலை ரியூப் மூலம் எடுத்துச் சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் அவர் நோய்வாய்ப்பட்டு நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு எக்மோ சிகிச்சைக்காக கடந்த 11ஆம் திகதி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இன்று (14) காலை மரணமடைந்தார். உயிரிழந்த வைத்தியரின் சடலத்தின் பிரேதப் பரிசோதனையை சட்ட வைத்திய நிபுணர் திருமதி ஜானகி வருசஹன்ன மேற்கொண்டார்.