யாழ் வடமராட்சி கிழக்கில் சிக்கிய பாரிய சுறா

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடல் பகுதியில் பெரியளவிலான சுறா மீன் ஒன்று கடற்தொழிலாளரின் வலையில் சிக்கியுள்ளது.

இந்த சுறா சுமார் 3 ஆயிரத்து 700 கிலோ கிராம் என தெரிவிக்கப்படுகிறது. வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியைச் சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரின் வலையில் இந்த சுறா சிக்கியுள்ளது.

இந்நிலையில் கடுமையான போராட்டத்தின் மத்தியில், சக கடற்தொழிலாளர்களின் உதவியுடன் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.