குற்றச்சாட்டை மறுக்கும் கோட்டாபய ராஜபக்ஸ
ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானியாவின் செனல் 4 ஊடக நிறுவனம் காணொளி ஒன்றை வெளியிட்டு முன்வைத்துள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2005 இலிருந்து ராஜபக்ஷர்களின் பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ராஜபக்ஷர்களுக்கு எதிராக குறித்த ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்ட முந்தைய படங்களைப் போலவே இதுவும் பொய்கள் என கோட்டாபய ராஜபக்ஸ வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.