மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – 13 பேர் காயம்

வரக்காபொல பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்ட 13 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாலபே ராகுல வித்தியாலயத்தில் இருந்து ரண்டம்பே நோக்கி மாணவர்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.
வரக்காபொல பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

பதவி விலகும்படி ரணிலுக்கு கடும் அழுத்தம்
பிரதமர் மற்றும் பதில் ஜனாதிபதி பதவிகளில் இருந்து ரணில் விக்கிரமசிங்க உடனடியாக பதவி [...]

முல்லைத்தீவு துணுக்காய் ஐயங்குளம் பகுதியில் சிசு ஒன்றின் எச்சங்கள் மீட்பு
கால் நடை மேய்ப்பாளர்கள் வழங்கிய தகவலுக்கமைய குறித்த இடத்திலிருந்து எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன இதே [...]

மட்டக்களப்பில் தூக்கில் தொங்கி மூவர் பலி
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்தில் மாணவி உட்பட மூவர் தூக்கில் [...]