யாழில் வாள்வெட்டு தாக்குதல் – மூதாட்டி படுகாயம்
வீட்டுக்குள் கொள்ளை கும்பல் நுழைந்ததை அவதானித்த மூதாட்டி சத்தமிட்ட நிலையில் மூதாட்டி மீது சரமாரி வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் தெல்லிப்பழை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த மூதாட்டி அயலவர்களால் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வாள்களுடன் வீட்டுக்குள் நுழைந்ததாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.