பாராளுமன்ற உறுப்பினரின் கார் மீது துப்பாக்கிச் சூடு – களமிறங்கிய சி.ஐ.டி


தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பிலான விசாரணை உடனடியாக அமுலுக்கு வருமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது சில குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

நேற்று (17 இரவு 10.35 மணியளவில் அவரின் வீட்டுக்கு முன்பாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பும் போதே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

காரில் அவர் மட்டுமே இருந்ததாகவும், தாக்குதலில் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார்தெரிவித்தனர்.

காரின் இடது பின் இருக்கை பகுதியில் இரண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் அந்த விசாரணை தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வீட்டிற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *