பொலிஸாரின் வீதித் தடைகளில் உள்ளாடைகள் – Go Home Gota
உள்ளாடைகளில் Go Home Gota என எழுதப்பட்டு உலரவிடப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள் இடம்பெறுவதை கட்டுப்படுத்துவதற்காக, கம்பிகளால் பொறுத்தப்பட்ட முட்வேலிகள் போடப்பட்டு பொலிசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இரும்பு கம்பிக்களைக் கொண்டு தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ள அதேசமயம் நாடாளுமன்றத்துக்கு செல்லும் வீதிகளில் சாதாரண பொதுமக்கள் நுழைய முடியாத வகையில், இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள வேலிகளில், போராட்டக்காரர்கள் உள்ளாடைகளை உலரவிட்டு, கடும் எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றனர்.
அந்தவகையில் நாடாளுமன்றத்துக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலிகளிலேயே போராட்டகாரகள் Go Home Gota என பொறிக்கப்பட்ட உள்ளாடைகளை உலரவிட்டுள்ளமை குறிப்பிடத்க்கது.