யாழில் வைத்தியசாலையில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா
யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த 21ம் திகதி தொடக்கம் சிகிச்சை பெற்றுவந்த 94 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவருக்கு கொவிட் தொற்று அடையாளம் காணப்பட்டதாக சுகாதார பிரிவு தகவல்கள் கூறுகின்றன.
உடநல குறைவால் கடந்த 21ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த முதியவர் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த முதியவரின் வீட்டிற்கு வெளிநாட்டிலிருந்து வந்திருந்த சிலர் சுகயீனமடைந்த நிலையில்,
அவர்களுக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொவிட் உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்தே உயிரிழந்த முதியவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை உயிரிழந்தவரின் சடலம் வீட்டாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.