பெற்றோல் மற்றும் டீசலை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த நபர் கைது

பெற்றோல் மற்றும் டீசலை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் பிலியந்தலை பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் 31 வயதுடைய அதே பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் பிலியந்தலை எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் மகன் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் இருந்து 180 லீற்றர் டீசல், 7 லீற்றர் பெற்றோல் மற்றும் எரிபொருளை எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த நபர் டீசல் ஒரு போத்தல் 600 ரூபாவுக்கும், பெற்றோல் ஒரு போத்தல் 700 ரூபாவுக்கும் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Related Post

கோட்டாபய தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் [...]

இலங்கையில் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 600 பேருக்கு திடீர் சுகவீனம்
கண்டி பிரதேச ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டதாக கூறப்படும் [...]

மட்டக்களப்பில் குளிர்பானம் குடித்த இளைஞன் திடீர் மரணம்
மட்டக்களப்பு – காத்தான்குடி – நாவற்குடாவில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் மரணமான [...]