பயத்தில் காவல்துறையிடம் தஞ்சம் புகுந்த வியாழேந்திரன்
இராஜாங்க அமைச்சர் S.வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலயத்தில் நேற்று (29) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக சுட்டுக்கொல்லப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் ஜனன தின நிகழ்வுகள் கடந்த திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டன.
இதன் பின்னர் இராஜாங்க அமைச்சரின் வீட்டிற்கு முன்பாக சிலர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த 25 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது தமக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் வார்த்தை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தே இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் முறைப்பாடு செய்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைபில் இருந்து பிரிந்து மைத்திரியுடன் இணைந்து அதன் பின்னர் கோட்டாபயவுடன் இணைந்து அக் கட்சியில் மட்டக்களப்பில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்று இராஜாங்க அமைச்சரானமை குறிப்பிடத் தக்கது.
ஜனாதிபதி கோட்டாபயவிற்கு மிகவும் நம்பிக்கைக்குரிய முக்கியஸ்தராக உள்ளமை குறிப்பிடத் தக்கது.
வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற படுகொலை வீதியில் கதறும் தாய்
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர்களது குடும்பத்தினர் தாக சாந்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு ஊரணி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
பாலசுந்தரம் கடந்த வருடம் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டு வாசலுக்கு முன்பாக அவரது மெய்ப்பாதுகாவலரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் தந்தையர் தனது மகனுக்கான நீதியான விசாரணை இடம்பெற வேண்டும் என்றும் கொலை செய்த குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் போராட்டத்தை முன் எடுத்தனர்.
தனது மகனின் கொலை தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருந்த பாலசுந்தரத்தின் தந்தையர் இன்று வரை தனது மகனின் கொலைக்கு நீதியான விசாரணை கிடைக்கவில்லை என ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த போராட்டத்தில் அரசியல்வாதிகள் பொதுமக்கள் குடும்பத்தினர் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.