T-56 ரக துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர வெடிப்பொருட்களுடன் பெண் ஒருவர் கைது

T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து T-56 துப்பாக்கி, 03 மகசீன்கள் மற்றும் 184 தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் தொகையொன்று பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரை கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
Related Post

யாழில் பிரபல பாடசாலை மாணவன் அதிரடியாக கைது
யாழ்.நகர்ப்பகுதியில் ஆபத்தான ஹெரோயின் போதைப் பொருளுடன் பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். [...]

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதல் – ஒருவர் படுகாயம்
யாழ்.காரைநகரில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருவருக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் [...]

யாழ் மாவட்ட வர்த்தகர்கள் மீது நடவடிக்கை – மாவட்ட செயலர் எச்சரிக்கை
யாழ்ப்பாண மாவட்டத்தில் சீனியை பதுக்கி செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் [...]