பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை


எரிபொருள் கொண்டு செல்லும் வாகனங்களை தடுத்தல் மற்றும் சேதப்படுத்தல் போன்றவற்றை தவிர்க்குமாறு பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அனைத்து எரிபொருள் பவுஸர்கள் மற்றும் ஏனைய வாகனங்களை தடை செய்யாமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட வேண்டுமென சிரேஷ்ட ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

“நேற்று நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களுக்கிடையில், பவுசர்கள் சேதப்படுத்தப்பட்டமை மற்றும் எரிபொருள் பவுஸர்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன.

எரிபொருள் வழங்கல் தடைப்பாட்டால் விசேடமாக அத்தியாவசிய உணவு மற்றும் மருத்து உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லும் நடவடிக்கை பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் எரிபொருள் பவுஸர்கள் மற்றும் ஏனைய வாகனங்களை தடுப்பதனை தவிரக்குமாறும் அவற்றிற்கு சேதம் ஏற்படுத்துவதனை தவிர்க்குமாறு விசேட கோரிக்கையாக கேட்டுக்கொள்கின்றேன்.

இன்றை தினம் கிடைக்கும் எரிபொருள் தொகையை உரிய இடங்களுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து நடவடிக்கைகளை வழமையான முறையில் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விசேடமான மக்களும் அதே போன்ற சமாதானமான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறும், எரிபொருள் பவுஸர்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் சேதப்படுத்துவதனை தவிரக்குமாறும் பொது மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என சிரேஷ்ட ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *