யாழ் இலுப்பையடி சந்தியில் விபத்து – இளைஞன் படுகாயம்
யாழ்ப்பாணம் இலுப்பையடிச் சந்திப் பகுதியில் ஜீப் ரக வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மாலை இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் நாவலர் வீதியால் பயணித்த ஜீப்ரக வாகனம் இலுப்பையடிச் சந்தியை கடக்க முற்பட்டுள்ள நிலையில்
யாழ்ப்பாணம் பலாலி வீதியூடாக புன்னாலைக்கட்டுவான் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் இலுப்பையடிச் சந்தியை கடக்க முற்பட்டபோது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனின் கால்கள் முறிவடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.