பரீட்சை காலத்தில் மின்வெட்டு – நீதிமன்றத்தின் தீர்ப்பு
உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ரிட் மனு விசாரணைக்கு உட்படுத்தப்படுமா? இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பு இம்மாதம் 10 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீண்ட விசாரணைகளின் பின்னர், சோபித ராஜகருண மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு இந்த உத்தரவை வழங்கியது.
அதன்படி, குறித்த மனு விசாரணைக்கு உட்படுத்தப்படுமா? இல்லையா? என்ற தீர்ப்பும் மனுவில் கோரப்பட்டுள்ள மின்வெட்டை தடுக்கும் இடைக்கால உத்தரவு மீதான முடிவு முடிவும் அன்றைய தினம் அறிவிக்கப்பட உள்ளது.