கோட்டபாய பயன்படுத்திய வாகனம் பியூமியிடம் – விசாரணைகள் ஆரம்பம்
இலங்கையின் பிரபல நடிகையும் மொடலிங்குமான பியூமி ஹன்சமாலியின் சொத்துகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நடிகையும் மொடலிங்குமான பியூமி ஹன்சமாலியின் சொத்துக்கள் மற்றும் குறிப்பாக அவர் பயன்படுத்தும் சொகுசு வாகனம் தொடர்பிலும் விசாரணை நடத்தக் கோரி
சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமையவே விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்நிலையில், இந்த சொகுசு வாகனமானது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.