யாழ் கோட்டையில் பாடசாலை சீருடையுடன் மாணவி துஷ்பிரயோகம்
யாழ்ப்பாணத்தில் இரு பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன,
குறித்த மாணவிகள் இருவரில் ஒருவர் யாழ்.கோட்டைப் பகுதியில் வைத்து பாடசாலை சீருடையுடன் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மற்றைய மாணவி வெளிமாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்த நிலையில் வெளிமாவட்டத்தில் வைத்து துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இரு மாணவிகளில் ஒருவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் மாணவிகள் கல்வி பயிலும் பாடசாலைகள் அமைந்துள்ள வலயங்களுக்கு பொறுப்பான வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம்
தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த சம்பவம் தொடர்பில் தமது வலையத்திற்கு முறைப்பாடுகள் கிடைக்கவில்லை என பதிலளித்தனர்.