யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் ஆடைகளைக் கிழித்த பொலிஸார்


யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட இழுபறியில் , பெண் ஒருவரின் ஆடை கிழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கில் காணப்படும் காணி தொடர்பான பிரச்சினைகள்,சுவீகரிப்புகள்,மற்றும் அரச திணைக்களங்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பில் ஆராய்தல் போன்றவற்றுக்காக ,ஆளுநர் அலுவலகத்தில் இன்று கூட்டம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது.

குறித்த கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜ தலைமையில் , யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் ,முப்படைகளுடன் தற்போது நடைபெறுகிறது.

அதேவேளை மக்களின் காணிகளை அபகரித்து ,படையினருக்கு வழங்குவதாக தெரிவித்து,இன்றைய தினம் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது கூட்டத்துக்கு வருகை தந்த முப்படைகளை உள்ளே நுழைய விடாமல் மக்கள் தடுத்ததுடன் பொலிஸார் போராட்டக் காரர்களுடன் இழுபறிப்பட்டனர்.

இதன் போது பெண் ஒருவரின் ஆடை கிழிந்தமையால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://youtu.be/YlEhBB7aYKI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *