குழந்தையின் கழுத்தில் கத்திவைத்து மிரட்டி கொள்ளை
வவுனியா நகரில் மோட்டார் சைக்கில் சென்றவர்களை வழிமறித்து அவர்களின் குழந்தை மீது கத்தியை வைத்து தயாரை மிரட்டி நகைகள் பறித்தமையுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிலையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சிட்டு அலுவலகத்திற்கு செல்லும் வீதியில் இன்று புதன்கிழமை (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,குறித்த பெண்மணி கடவுச்சீட்டு காரியாலத்திற்கு முன்பாக விண்ணப்படிவம் நிரப்பும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் ஆவார்.
அவர் இன்றையதினம் அதிகாலை தனது தொழில் நிமித்தம் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் தனது குழந்தையுடன் சென்றார்.
இவ்வாறு சென்று கொண்டிருந்தவேளை வீதியில் மறைந்து நின்ற முகமூடியணித்த மூவர் குறித்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து குழந்தையின் கழுத்தில் கத்தியினை வைத்து மிரட்டி
அவர்கள் அணிந்திருந்த நகைகளை அபரித்தமையுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அபகரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.