இந்தியாவுக்கு தப்பிக்க முயன்றவர் யாழ் விமான நிலையத்தில் கைது
கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பல்வேறு நபர்களிடம் , 25 கோடிக்கு மேல் மோசடி செய்த முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் யாழ்.விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மானிப்பாய் பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்காக , யாழ் விமான நிலையத்திற்கு சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளி நாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சி ஓன்றை நடத்தி அதன் மூலம் பலரிடம் பண மோசடியை செய்துள்ளார்.
இந்நிலையில் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்காக யாழ் விமான நிலையத்தை வந்தடைந்த போது , பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.