Day: March 1, 2024

இந்தியாவுக்கு தப்பிக்க முயன்றவர் யாழ் விமான நிலையத்தில் கைதுஇந்தியாவுக்கு தப்பிக்க முயன்றவர் யாழ் விமான நிலையத்தில் கைது

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பல்வேறு நபர்களிடம் , 25 கோடிக்கு மேல் மோசடி செய்த முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் யாழ்.விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்காக , யாழ் விமான நிலையத்திற்கு [...]

மருத்துவர்கள் சங்கத்தின் அலுவலகங்கள் பொலிஸாரால் முற்றுகைமருத்துவர்கள் சங்கத்தின் அலுவலகங்கள் பொலிஸாரால் முற்றுகை

கொரிய மருத்துவர்கள் சங்கத்தின் அலுவலகங்கள் மீது தென் கொரிய பொலிஸார் இன்று முற்றுகைகளை நடத்தியுள்ளனர். தென் கொரிய மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தால் வைத்தியசாலைகளில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பொலிஸாரின் முற்றுகைகள் இடம்பெற்றுள்ளன. சுமார் 10,000 கனிஷ்ட மருத்துவர்கள் கடந்த வாரம் பணிப்பகிஷ்கரிப்பில் [...]

பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த 13 வயது சிறுவன் – புதிய உலக சாதனைபாக்கு நீரிணையை நீந்திக்கடந்த 13 வயது சிறுவன் – புதிய உலக சாதனை

13 வயது ஹரிகரன் தன்வந்த் 32 கடல் மைல் பாக்கு நீரிணையை நீந்திக்கடந்து புதிய உலக சாதனை புரிந்துள்ளார். திருகோணமலை கடற்பரப்பில் 20 கிலோமீற்றர் தூரம் வரையான கடற்பரப்பில் நீச்சல் பயிற்சிகள் பெற்றுள்ளதோடு , கடந்த வாரம் இலங்கை – இந்திய [...]

உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது தாக்குதல் – 110க்கு மேற்பாட்டோர் பலிஉணவுக்காக காத்திருந்த மக்கள் மீது தாக்குதல் – 110க்கு மேற்பாட்டோர் பலி

பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில், உணவுப் பொருட்களைப் பெறுவதற்காக திரண்டிருந்த மக்கள் மீது இஸ்ரேலியப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால் குறைந்தபட்சம் 112 பேர் உயிரிந்ததுடன் மேலும் 760 பேர் காயமடைந்துள்ளனர். இந்த துயரமான சம்பவம் காஸா நகரில் நேற்று (29) இடம்பெற்றது. [...]

சமூக வலைத்தளங்களில் வெளியான பரீட்சை வினாத்தாள்சமூக வலைத்தளங்களில் வெளியான பரீட்சை வினாத்தாள்

மேல் மாகாண கல்வித் திணைக்களத்தால் இன்று (01) நடத்த திட்டமிடப்பட்டிருந்த பாடசாலை ஆண்டு இறுதி தவணைப் பரீட்சையின் சில வினாத்தாள்கள் நேற்று (29) இரவு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில், இன்று (01) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் [...]

சாந்தனின் பூதவுடல் இன்று இலங்கைக்குசாந்தனின் பூதவுடல் இன்று இலங்கைக்கு

சாந்தனின் பூதவுடன் இன்று காலை 11 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் விடுவிக்கப்பட்ட நிலையில் ஒன்றரை வருடங்கள் திருச்சி முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நல குறைவினால் [...]

யாழில் இ.போ.ச பேருந்து மோதி பாடசாலை மாணவன் பலியாழில் இ.போ.ச பேருந்து மோதி பாடசாலை மாணவன் பலி

யாழ். சாவகச்செரி – ஐயாகடை சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இ.போ.ச பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த மாணவன் சாவகச்செரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக [...]