பாத்தீனியம் ஆரோக்கியப் பிரச்சினை
ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இந்த செடியின் மலரிலுள்ள மகரந்தங்கள் குழந்தைகளுக்கும், முதியவர் களுக்கும் ஆஸ்த்துமா நோயை தோற்றுவிக்கிறது.
மேலும் அநேகருக்கு அலர்ஜியாக விளங்கும் இச்செடி அரிப்பையும், படை நோயையும் ஏற்படுத்தி தொல்லை தருகிறது. மனித குலத்துக்கும் விலங்கினத்துக்கும் தோல் வியாதிகளை உருவாக்குவதில் இது முன்னிலை வகிக்கிறது. கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.
பாத்தீனியம் செடியுடன் ஒவ்வாமை உடையவர்கள் உரிய பாதுகாப்பு ஆடைகளை அணிந்த பின்னர்தான் இச்செடிகளை அழிக்கும் வேலையில் இறங்கவேண்டும்.
பாத்தீனியம்என்ற பெயர் “Parthenice” என்ற லத்தீன் வார்த்தையிருந்து தோன்றியது இச்செடியின் தாவரவியல் பெயர் ““Parthenium Hysterophorous”” என்பதாகும். அமெரிக்க நாட்டை தாயகமாகக் கொண்ட இச்செடி ஒரு பருவகால (Annuals) பயிர் வகையைச் சார்ந்தது. இதற்கு மண்ணை ஆழமாகத் துளைத்துச் செல்லும் ஆணிவேரும், நேராக நிமிர்ந்து வளரும் உறுதியான தண்டுகளும் உண்டு.
பல கிளைகள் கொண்ட பார்த்தீனியம் செடியின் இலைகள் மங்கலான பச்சை நிறத்தையும், மென்மையான உரோமங்களையும் கொண்டிருக்கும். இதன் பூக்கள் செடியின் மேல் பகுதியில் வெண்மை நிறத்தில் காட்சி தரும். ஒரு செடி சராசரியாக தனது வாழ்நாளில் ஒரு இலட்சம் விதைகளை உற்பத்தி செய்யும். இந்த விதைகள் கறுப்பு நிறத்தில் வெள்ளை செதில்களுடன் கண்ணுக்குத் தெரியாத மிகச்சிறிய அளவில் காணப்படும்.