இலங்கையில் விற்கப்படும் பெண்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்


கொழும்பில் அழகான யுவதிகளை விற்கும் நபர் ஒருவர் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளை எடுத்துச் சென்ற மாமா என்ற பெயருடைய கடத்தல்காரர் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யுவதிகளுக்கு போதைப்பொருள் கொடுத்து விற்பனை
அவர் தங்கியுள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிவளைத்த பொலிஸார், நான்கு யுவதிகளையும், நான்கு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். அத்துடன் இந்த சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருள்கள் மற்றும் அவற்றைக் குடிக்கப் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

அழகான யுவதிகளுக்கு போதைப்பொருள் கொடுத்து அவர்களை பணத்திற்கு விற்பனை செய்யும் மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸார் அந்த வீட்டை மேலும் சோதனையிட்ட போது, ​​போதைப்பொருள் ஐஸ் பொதி செய்ய பயன்படுத்தப்பட்ட சிறிய மெழுகு குச்சிகள் என்பனவும் பெருமளவில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *