இலங்கையில் மற்றுமொரு கொரோனா மரணம்

சுகயீனம் காரணமாக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்-நிமோனியா என தெரியவந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யக்கல பிரதேசத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள பிரதேசத்தில் வசித்து வந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனையின் போது, அவர் கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக கம்பஹா மரண விசாரணை அதிகாரி டாக்டர் பி.பி.ஆர்.பி.ராஜபக்ஷ தெரிவித்தார்.
கம்பஹா மாநகரசபையின் கட்டுப்பாட்டில் உள்ள கசகஹவத்த சுடுகாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உயிரிழந்தவரின் சடலம் தகனம் செய்யப்பட்டுள்ளதாக மாநகரசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில நாட்களுக்கு முன்னர் கண்டி வைத்தியசாலையில் கொரோனா மரணம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related Post

முல்லைத்தீவில் பாடசாலை மாணவி கடத்தல் – தகவல் தருவோருக்கு சன்மானம்
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குமுழமுனை மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 16 [...]

குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு அவசர அறிவிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக நாட்டை சூழவுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் [...]

உறக்கத்தில் இருந்த கணவன் மீது மனைவி கொடூர தாக்குதல்
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் நேற்று (02) அதிகாலை 5.00 மணியளவில் [...]