யாழில் திடீரென மயங்கி விழுந்து இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில், நேற்று புதன்கிழமை (13) இருவேறு இடங்களில் திடீரென மயங்கி விழுத்த முதியவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையில், அரைக்க கொடுத்து விட்டு , கதிரையில் காத்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த போதும் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பொன்னாலை மேற்கு சுழிபுரத்தை சேர்ந்த இரட்ணம் அருளானந்தம் (வயது 69) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அதேவேளை பலாலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மயங்கி விழுந்த முதியவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு, தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதன்போது புன்னாலை கட்டுவன் வடக்கை சேர்ந்த செல்வம் சிவானந்தம் (வயது 81) என்பவரே உயிரிழந்துள்ளார்.
Related Post

இலங்கையில் மின் கட்டணம் மேலும் அதிகரிக்கும் அபாயம்
நாட்டில் அண்மையில் மின் கட்டணம் 75 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டது. இருப்பினும், மின்சார சபை [...]

வௌவால்கள் மூலம் பரவும் புதிய வைரஸ் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை
வௌவால்களுக்கு மத்தியில் பரவும் அவற்றின் ஊடாக மனிதர்களுக்கு பரவக்கூடிய புதிய வைரஸ் குறித்து [...]

வாகன உதிரிபாகங்களின் விலைகள் 300 வீதத்திற்கும் மேலாக அதிகரிப்பு
சந்தையில் வாகன உதிரிபாகங்களின் விலைகள் 300 வீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் [...]