வாகன உதிரிபாகங்களின் விலைகள் 300 வீதத்திற்கும் மேலாக அதிகரிப்பு
சந்தையில் வாகன உதிரிபாகங்களின் விலைகள் 300 வீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மின்கலங்கள், மின்விளக்குகள், கண்ணாடிகள், வாகனத் தகடுகள், இயந்திரங்கள் உள்ளிட்ட வாகன உதிரி பாகங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக பஞ்சிகாவத்தை உதிரி பாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சந்தையில் வாகன உதிரி பாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நிதி நிறுவனங்கள் கடன் கடிதம் வழங்காததால் உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக உதிரி பாகங்கள் இறக்குமதியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த 5 வருடங்களில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் நூறு வாகனங்களுக்கு பயன்படுத்தக்கூடிய உதிரி பாகங்கள் அண்மையில் ஒருகுடாவத்தை சுங்க கொள்கலன் முனையத்தில் வைத்து அழிக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த சுங்க வருமான மேற்பார்வைப் படையின் பணிப்பாளர் டி.பி.எம்.சமரதுங்க, உதிரி பாகங்களை சந்தைக்கு விடுவித்தால் தரமற்ற வாகனங்கள் அசெம்பிள் ஆகக்கூடிய அபாயம் உள்ளதால் அவை அழிக்கப்பட்டதாக தெரிவித்தார்.