வௌவால்கள் மூலம் பரவும் புதிய வைரஸ் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை
வௌவால்களுக்கு மத்தியில் பரவும் அவற்றின் ஊடாக மனிதர்களுக்கு பரவக்கூடிய புதிய வைரஸ் குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொஸ்டா-2 (Khosta-2) என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் மனித உயிரணுக்களில் வேகமாக தொற்றக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸூக்கான எவ்வித மருந்துகளும் இல்லை.
கொஸ்டா-2 என்ற இந்த வைரஸ் 2000 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று அப்போது விஞ்ஞானிகள் நம்பவில்லை.
கோவிட் வைரஸ் பரவலை அடுத்தே அமெரிக்க விஞ்ஞானிகள் கொஸ்டா 2 வைரஸ் தொடர்பாக கூடுதல் கவனத்தை செலுத்தினர்.
இதனடிப்படையில், கடந்த சில மாதங்களில் அமெரிக்க விஞ்ஞானிகள் இந்த புதிய வைரஸ் தொடர்பாக பல ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளனர்.