நடிகரும் இயக்குநருமான ரா.சங்கரன் காலமானார்

மோகன் – கார்த்திக் நடிப்பில் வெளியான மௌனராகம் திரைப்படத்தில் மிஸ்டர் சந்திரமௌலியாக புகழ்பெற்ற நடிகரும் இயக்குநருமான ரா.சங்கரன் (93) உடல் நலக்குறைவால் இன்று (14) சென்னையில் காலமானார்.
1974இல் ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் தேன் சிந்துதே வானம், துர்கா தேவி, தூண்டில் மீன் உள்ளிட்ட 8 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
பொண்டாட்டி தேவை, தாயம்மா, சின்ன கவுண்டர், அமராவதி, சதி லீலாவதி, காதல் கோட்டை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மௌனராகம் படத்தில் நடிகை ரேவதியின் அப்பாவாக சந்திரமௌலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
நாயகனான கார்த்தி, ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என அவரைக் கூப்பிடும் காட்சி மிகப் பிரபலம். சில நாள்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தவர் இன்று காலமானார். அவரின் மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Related Post

கணவன் உயிரை காப்பாற்றி இருப்பேன் – வருத்தப்படும் மீனா
நடிகை மீனா தனது கணவர் மரணம் பற்றி உருக்கமாக பேசி இருக்கிறார். மேலும் [...]

மர்மமான முறையில் பிரபல நடிகர் மரணம்
மர்மமான முறையில் பிரபல மலையாள நடிகர் சரத் சந்திரன் திடீரென மரணமடைந்துள்ளார். அங்மாலி [...]

கவர்ச்சிக்கு மாறிய காயத்ரி – வைரலாகும் புகைப்படம்
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் [...]