சிறுவர் தின கொண்டாட்டம் – நவாலி கலைமகள் முன்பள்ளி
நவாலி வடக்கு சனசமூக சமூக நிலையத்தின் கீழ் இயங்கும் கலைமகள் முன்பள்ளி நிலையத்தின் சிறுவர் தின கொண்டாட்டம் இன்றைய தினம் மானிப்பாய் பிரதேச சபை சிறுவர் பூங்காவில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
சிறுவர்களை கௌரவித்து அவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. இதில் சனசமூகநிலைய தலைவர் செயலாளர் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.