யாழ் சாவகச்சேரியில் விபத்து – 35 வயதான இளைஞர் பலி

யாழ்ப்பாணம் சாவகச்சேரி, நுணாவில் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரியில் இருந்து நுணாவில் நோக்கிச் பயணித்த பிக்கப் வாகனமும் ஒன்றோடு ஒன்று மோதியதாலேயே விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நுணாவில் பகுதியில் விடுதி ஒன்றின் உரிமையாளரான 35 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Related Post

ஜனாதிபதியின் சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும், புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, தேசம் உலகம் [...]

யாழ் நல்லூரில் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் விளக்கமறியலில், 7 குழந்தைகள் மீட்பு
கையில் குழந்தைகளுடன் ஊதுபத்தி வியாபாரம் செய்த 3 பெண்களும், ஆண் ஒருவரும் அவர்களை [...]

கிளிநொச்சியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலி
கிளிநொச்சி செல்வநகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். 2 குழந்தைகளுடன் [...]