கால்வாயை கடக்க முற்பட்ட நபர் ஒருவர் மாயம்
முந்தல், தாராவில்லுவ பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் கிரியன்கல்லி கால்வாயை கடக்க முற்பட்ட நபர் ஒருவர் குறித்த கால்வாய் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
நேற்று (01) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியில் குறித்த நபர் கிரியான்கல்லி கால்வாயின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ள நிலையில் அதனை கடக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, காணாமல் போனவரை தேடும் பணியை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.