மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி – விசாரணையில் வெளியான தகவல்
மர்மமான முறையில் உயிரிழந்த களுத்துறை பாடசாலை மாணவியின் சடலம் சட்ட வைத்தியரிடம் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி சிறுமியின் உடல் உறுப்புகள் அரசாங்க பரிசோதகர்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.