வடக்கு உள்ளிட்ட பல மாகாணங்களுக்கு இன்று மழை
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்யும் எனவும், நாட்டின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளிலும் மத்திய நாட்டின் மேற்கு சரிவுகளிலும் அவ்வப்போது மணிக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் ஆபத்துகளை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.