50 என்ஜின்கள் பழுது – ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு
50 ரயில் என்ஜின்கள் பல்வேறு காரணங்களால் பழுதடைந்து காணப்படுகின்றன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்தியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட என்ஜின்கள் தொழில்நுட்பக் குறைபாடுகளால் பழுதடைந்துள்ளன என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எம்.ஜே. இதிபொலகே தெரிவித்துள்ளார்.