யாழில் மின்சாரம் தாக்கி உயர்தர மாணவன் உயிரிழப்பு


மின்சாரம் தாக்கி க.பொ.த உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 1.15 மணியளவில் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் கண்ணதாசன் இராகுலன் (வயது-18) என்ற மாணவனே உயிரிழந்தார்.

வீட்டில் வளர்க்கப்படும் ஆடு குட்டி ஈன்றதனால் அதனை வேறு இடத்துக்கு மாற்ற முற்பட்ட போது பலா மரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்குமிழில் ஏற்பட்ட மின் ஒழுக்கு மாணவனை தாக்கியது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

மழை பெய்து கொண்டிருந்த வேளையில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *