யாழில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிப்பு
நாட்டில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.
இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றது இவ்வாறான நிலையில் யாழில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக மூன்று குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பருவப் பெயர்ச்சி மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் யாழ். மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்துவருகின்றது.
இந்த அடைமழை காரணமாக வீட்டினுள் வெள்ளம் புகுந்ததனால் யாழ்ப்பாணம் – காக்கைதீவு பகுதியில் வசித்துவரும் 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் காக்கைதீவு மீனவர் சங்க கட்டடத்தினுள் தங்கியுள்ளனர்.