யாழில் நகைக்கடை உரிமையாளரும், பணியாற்றிய 22 வயது பெண்ணும் தற்கொலை
யாழ்ப்பாணத்தில் நியூ மைதிலி மற்றும் சந்தோஷ் நகைக் கடை ஆகிய இரண்டு நகைக்கடை உரிமையாளர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரைத் தொடர்ந்து குறித்த நகை கடையில் பணிபுரிந்த பெண்ணும் அதே நிலையில் தூக்கு மாட்டி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருவரும் சுமார் ஓரிரு மணித்தியால இடைவெளியில் தற்கொலை செய்துள்ளனர். நாவாந்துறையை சேர்ந்த 22 வயதான யுவதியொருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
அவர் நகைக்கடையில் பணிபுரிந்தவர். இவர் இன்று நகைக்கடைக்கு வரவில்லை. மதியமளவில் தனது வீட்டில் தற்கொலை செய்தார். அவர் தற்கொலை செய்த தகவல் நகைக்கடையிலிருந்தவர்களிற்கு தெரிய வந்தது.
இதையடுத்து, மதியம் சுமார் 2 மணியளவில் வர்த்தகர் தனது வீட்டிற்கு மதிய உணவு அருந்த சென்றார். வீட்டிலேயே தற்கொலை செய்துள்ளார். நாவலர் வீதி, ஆனைப்பந்தியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது மனைவி, பிள்ளைகள் தற்போது கொழும்பில் தங்கியிருந்ததாக குறிப்பிடப்படுகிறது. இரண்டு மரணங்களிற்கும் தொடர்புள்ளதா அல்லது தனித்தனி சம்பவங்களா என பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.