வைத்தியசாலைகளுக்குள் இராணுவம், பொலிஸார் – அரசாங்கத்துக்கு எச்சரிக்கை
வைத்தியசாலைகளுக்குள் இராணுவத்தினரை அல்லது பொலிஸாரை நிறுத்தி வேலை நிறுத்தத்தை ஒடுக்க முற்பட்டால், நிச்சயமாக வேலை நிறுத்தம் தொடர்ச்சியான போராட்டமாக மாறும் என்று வைத்திய நிபுணர்களின் ஒன்றிணைந்த பேரவையின் தலைவர் ரவி குமுதேஷ், செவ்வாய்க்கிழமை (14) தெரிவித்தார்.
வேலைநிறுத்தத்துக்கு அரசாங்கம் வழங்கும் பதிலைப் பொறுத்தே போராட்டத்தின் ஆயுட்காலம் தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்த அவர், தேவையற்ற குறுக்கீடுகள் மூலம் வேலைநிறுத்தத்தை நீட்டிக்க வேண்டாம் என்றார்.