காப்புறுதி நிறுவனத்தின் தலைவர் கடத்தல்


பிரதான காப்புறுதி நிறுவனமொன்றின் தலைவர் ஒருவரை கடத்திச் சென்று படுகொலை செய்ய முயற்சித்தமை தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டரை கடத்திச் சென்று பொரளை மயானத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்ய முயற்சித்ததாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் பல கோடி ரூபா கடனுதவி வழங்கம் நபர் ஒருவரை சந்திக்க போவதாக மனைவியிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறாக குருந்துவத்தை மல்பாறை பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து அவர் நேற்று (14) பிற்பகல் சென்றுள்ளார்.

அதன் பிறகு அவரது மனைவி சிறிது நேரம் கழித்து அவரை அழைத்து பார்த்தபோது அவரது தொலைபேசியை தொடர்பு கொள்ளாமல் முடியாமல் இருந்துள்ளது.

தொலைபேசி ஊடாக கிடைத்த சிக்னல்களுக்கு அமைய அவரது தொலைபேசி பொரளை மயானத்திற்கு அருகில் இருப்பதை மனைவி கண்டுபிடித்துள்ளார்.

இதில் சந்தேகமடைந்த அவரின் மனைவி, நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஒருவரிடம் கூறி அவரை பொரளை மயானத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதன்போது கடத்தப்பட்ட நபர் வந்த காரின் சாரதி இருக்கையில் கைகள் கட்டப்பட்டிருந்ததையும், கழுத்தில் கம்பியொன்றும் கிடந்ததையும் அவர் அவதானித்து பொலிஸாரிடம் தெரிவித்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதன்போது, ​​உடனடியாக செயற்பட்ட குறித்த நிறைவேற்று அதிகாரி, மயானத்தில் இருந்த தொழிலாளியின் உதவியுடன் கடத்தப்பட்டவரின் கைகளையும் கழுத்தில் இருந்த கம்பியையும் அகற்றி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

கடத்தப்பட்ட நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரிடமிருந்து எந்த அறிக்கையும் வெளியிட முடியாத நிலையில் இருப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த நபரின் காருக்கு அருகில் இனந்தெரியாத நபர் ஒருவர் செல்வதை மயானத்தில் பணிபுரிபவர் பார்த்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் தலைவரிடம் பல கோடி ரூபா கடன் பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் தலைவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 03 முறைப்பாடுகளை செய்துள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *