க.பொ.த சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்றுடன் நிறைவு
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் பணி இன்றுடன் நிறைவடைகிறது.
இம்முறை பரீட்சைக்கு ஓன்லைன் (online) ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க வேண்டும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரர்கள் தமது பாடசாலை அதிபரினூடாகவும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட முறையிலும் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய விண்ணப்பிக்க வேண்டும்.
பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.doenets.lk அல்லது http://www.onlineexams.gov.lk என்ற முகவரியினூடாக இணையத்தில் பிரவேசித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். தேவைப்படும் பட்சத்தில் சமர்ப்பிப்பதற்காக விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பத்தின் பிரதி ஒன்றை தம் வசம் வைத்திருத்தல் வேண்டும்.
விண்ணப்பங்களை முன்வைப்பதற்கான user name மற்றும் password அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எக்காரணம் கொண்டும் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.